”எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும்போது நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது? ஆகவே கவலைப் படாமல் இரு!” என்பார் கவியரசர் கண்ணதாசன். அவருடைய கவிதைகளும், எழுத்துக்களும்தான் என்னைக் கவலையில்லாத மனிதனாக்கின! கவலையில்லாத மனிதன் என்று ஆகிவிட்ட பின்னால், என்னைப் பற்றி உயர்வாகச் சொல்ல, அதைவிட உயர்வானது வேறு என்ன இருக்கிறது?